• Dec 26 2024

பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்.! பேரிடியாய் விழுந்த தகவல்

Aathira / 12 hours ago

Advertisement

Listen News!

மலையாள இலக்கிய உலகில் பிரபலமானவராக எம்.டி.வாசுதேவன் நாயர் காணப்படுகின்றார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் இயக்குனர் ஆகவும் திகழ்ந்து வருகின்றார். சமீபத்தில் இவருடைய சிறுகதைகள் மனோரத்தினங்கள் என்ற பெயரிலும் வெளியாகி  இருந்தன.

இந்த நிலையில், எம்.டி.வாசுதேவன் நாயருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். தற்போது இவருடைய மரணச் செய்தி பலருக்கும்  அதிர்ச்சியாக காணப்படுகிறது.

இவர் மொத்தமாக ஏழு படங்களை தான் இயற்றியுள்ளார். அது மட்டும் இல்லாமல் 54 படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார். ஒரு வடக்கன் வீர கத, கடவு, சதயம், பரினயம் போன்ற படங்களுக்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.


2005 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் மனோரத்தினங்கள் என்ற பெயரில் ஆந்தாலஜியாக உருவானது. அதில் மம்முட்டி, மோகன்லால், பகவத் பாஸில் உள்ளிட்டோர்  நடித்துள்ளார்கள். அதற்கு கமலஹாசன் வாய்ஸ் கொடுத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாசுதேவன் நாயருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இடைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவருடைய மரணத்திற்கு கமலஹாசன் தனது எக்ஸ் தள  பக்கத்தில் இரங்கல் பதிவையும் தெரிவித்துள்ளார். தற்போது பலரும் வாசுதேவ நாயனின் மரணத்திற்கு தமது இரங்கலை  தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement