கன்னடத்தில் பிரபல நடிகராக காணப்படும் சிவராஜ் குமாருக்கு அமெரிக்காவில் மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இவர் ஜெயிலர் படத்திலும் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்பட்டது.
பெங்களூரில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் டிசம்பர் 25ஆம் தேதி அறுவை சிகிச்சை நடக்க உள்ளது என்றும் மருத்துவர் முறுகேஷ் தான் தனக்கு சிகிச்சை செய்ய இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சிவராஜ் குமார் நலமுடன் இருப்பதாக மருத்துவர் வீடியோ வெளியிட்டுள்ளதோடு அதில் அவரின் சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு அவரின் குடலை பயன்படுத்தி செயற்கை சிறுநீர்ப்பை உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அமெரிக்காவில் ஒரு மாதம் தங்கி அனைத்து சிகிச்சைகளையும் முடித்துவிட்டு தான் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார். அவருடன் அவருடைய மனைவியும் இளைய மகளும் உள்ளனர்.
Listen News!