• Dec 26 2024

சத்தமின்றி வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் FINALE TRP! கமல் படத்தில் பிரதீப்புக்கு வாய்ப்பு?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 ன் மிகவும் சிறப்பான கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 7இல் பல கோடி மக்களின் வாக்குகள் மூலம் அர்ச்சனா வெற்றியும் பெற்றார். மணி, மாயாவுக்கு ரன்னரும் கிடைத்தது . 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிரபலன்களின் ரசிகர்கள் அவர்களை  வரவேற்று மிகவும் மகிழ்ச்சியாக  கொண்டாடி வருகின்றார்கள்.

எனினும், அர்ச்சனாவின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அர்ச்சனா PR  மூலம் தான் வெற்றியடைந்தார். காசு கொடுத்து தான் வின் பண்ணினார் என பல வதந்திகளும் கிளம்பியது . 


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இன் TRP பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கமல் படத்தில் பிரதீப்க்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, இதுவரை இடம்பெற்ற பிக் பாஸ் சீசன்களை விட, இந்த முறை இடம்பெற்ற பிக் பாஸ் சீசன் 7 தான் ரொம்ப குறைவான TRP யை பெற்றுள்ளதாம்.

இம்முறை யார் டைட்டில் வின் பண்ணினாலும் பரவாயில்லை என்பது போல  5.5 ரேங்கிற்கு ரொம்ப ரொம்ப குறைவான TRP யை பெற்றுள்ளது பிக் பாஸ் சீசன் 7. 

இந்த சீசனில் TRP அதிகமானது என்றால் பிரதீபுக்கு ரெட் கார்ட் காட்டி மனசாட்டியயே இல்லாமல் வெளியே அனுப்பிய தருணத்தில் தான்.


பிரதீப் விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தான் இரண்டு மூன்று கிழமைகள் வைத்து TRP க்காக ஓட்டினார்கள் என்று தான் சொல்ல வேண்டும் . இல்லை என்றால் இன்னும் குறைவாகவே TRP இருந்து இருக்கும் . 

இதை தொடர்ந்து, பிரதீப்பின் ஒரு கோடி விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவிக் கொண்டு இருக்கிறது.

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தார் .  நல்ல கேம் பிளேயர் இவர் தான் டைட்டில் வின்னர் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் ரெட் கார்ட் மூலம் வெளியேறினார் . 


அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பியவர்கள் எல்லோரும், தற்போது  வெளியில் வந்த பிறகு நாங்கள் செய்தது தப்பு என்று உணர்ந்துள்ளார்கள்.

இதன் காரணமாக இந்த விவகாரம்  கமல் பக்கம் திரும்பியது . இதனால் மக்கள் ஒரு சிலர் சமூகவலைத்தளங்களில்  கமலின் ஒரு படத்தில் பிரதீபுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பரவி வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரதீப்பின் கனவை அழித்தவர்கள் அதனால் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது மக்கள் கொள்கை ஆகும் .

Advertisement

Advertisement