• Dec 27 2024

5000 படங்களுக்கு மேல் டப்பிங்... நகைச்சுவையான பேச்சு! நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் மனைவி பற்றி தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக வலம் வந்த துர்கா சுந்தரராஜன் தற்போது  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

1982 ஆம் ஆண்டு முதல் சுந்தரராஜனின் மனைவி துர்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் டப்பிங் கலைஞராக பிரபலமடைந்தவர்.

இவர், ஐயாயிரம் படங்களுக்கு மேல் முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். அதிலும் தூரல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு போன்றவை ரொம்பவும் பிரபலமானவை.


தற்போது இவர் ஒரு பேட்டியின் போது மிகவும் நகைச்சுவையாக மனம் திறந்து பேசியதும் மட்டும் இல்லாமல் அவர் படங்களுக்கு கொடுத்த  வாய்ஸ் எல்லாம் திரைப்பட சீன்னோட செய்து காட்டியுள்ளார் .

அதன்படி அவர் கூறுகையில், நான் ஐயாயிரம் படங்களுக்கு மேல டப்பிங்  பண்ணி இருக்கிறேன் .  அனால் இன்னும் அந்த டயலாக் எல்லாமே எனக்கு  ஞாபகம் இருக்கிறது . எங்கட காலத்தில சின்ன பிள்ளைகளின் வாய்ஸ் வயது கூடிய  டப்பிங் ஆர்டிஸ்ட் தான் கொடுக்கிறது . நானே நிறைய படங்களுக்கு சின்ன பிள்ளைக்கு வாய்ஸ் கொடுத்தேன் . இப்போது அப்படி இல்லை சிறுவர்களுக்கு சிறுவர்களையே  டப்பிங் வாய்ஸ் கொடுக்கிறார்கள் .


நடிகைளுக்கு வயதாகும் போது  எங்களுக்கு வயதாக கூடாதா ? என கேள்வியை கேட்ட துர்கா , அவர் டப்பிங் ஆர்டிஸ்  பண்ணிய எல்லா படங்களினதும் டயலாக் செய்து காட்டி ரசிகர்களை மகிழ்வுபடுத்தியுள்ளார் . 

முதல் முறையாக டப்பிங் ஆர்டிஸ்டிட் பண்ணனும் என்று ஆசை வந்ததும் அம்மாட்ட கேட்டேன் நான் கதைக்கவா என்று அம்மா சொன்னார் அதெல்லாம் உனக்கு வராது பேசாமல் இரு என்று.


ஆனாலும், அங்க இருக்கிற இயக்குனர்கள், பாப்பா என்ன சொல்றாங்க? முயற்சி செய்து பார்க்கட்டுமே என்று சொல்ல, நான் செய்து பார்த்தது தான் . அதுவே என்னுடைய வேலையாகவே போய் விட்டது என்றார்.

Advertisement

Advertisement