• Dec 26 2024

அவரும் இல்ல... இவரும் இல்ல.. !! கடைசில பிக் பாஸை தொகுத்து வழங்க வருகிறார் நம்ம நாட்டாமை...?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமடைந்ததை தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருவதோடு இதுவரை நடைபெற்று முடிந்த ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே சனி ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதும்.

சமூக வலைத்தளங்களை பிரபலமாக காணப்படுவோர் மற்றும் நடிகர்கள், நடிகைகள் ஆகியோர் சினிமா வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இதன் மூலம் மேலும் பிரபலமடைந்து பல வாய்ப்புகளை தமதாக்கி  கொள்வார்கள்.

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதில் யார் என்ற கேள்வி தற்போது வரையில் தொடர்ந்து வருகின்றது.


இதனால் நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், சிம்பு உட்பட பலரின் பெயர்கள் சோஷியல் மீடியாவில் அடிபட்டன. எனினும் அவையெல்லாம் வதந்தி என தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல்களின்படி பிக் பாஸ்  நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை நடிகர் சரத்குமார் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அவரிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது.

Advertisement

Advertisement