• Dec 26 2024

24 மணி நேரத்தில் முதல் எவிக்சன்? முதல் நாளே சூடுபிடித்த பிக் பாஸ் சீசன் 8

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை புதிய கோஸ்ட், பெரிய வீடு, புதிய போட்டியாளர்கள் என பல புதுமைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு சீசனிலும் பல புதுமைகளோடு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி கோஸ்ட்டாக களம் இறங்கி தனது பாணியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிவில் பார்வையாளர்களிடம் உரையாடிய விஜய் சேதுபதி, இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று பேசியதோடு பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக பங்கேற்றவர்களில் இருந்து ஒருவர்  24 மணி நேரத்தில் வெளியேற்றப்படுவார் என்று அறிவித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.


இந்த அறிவிப்பை போட்டியாளர்கள் ரசிகர்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. முதல் எபிசோடிலேயே விஜய் சேதுபதியின் இந்த அறிவிப்பு பலரையும் உச்சத்திற்கே கூட்டிச் சென்றுள்ளது.

பிக் பாஸ் 8ல் புதிய விதிகள், புதிய போட்டியாளர்கள், புதிய களம், என ஆண்களா? பெண்களா? என்ற விவாதத்துடன் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள். முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் அந்த பிரபலம் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


Advertisement

Advertisement