• Dec 27 2024

கருடனுக்கும் நாகருக்கும் யுத்தம்.. நாக கற்களை எடுக்கும் வரை ஓயாது! யோகி பாபுவின் ‘கஜானா’ டிரைலர்..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்த திரைப்படம் தான் கஜானா. இந்த படத்தை அவர் தயாரித்துள்ளதோடு, கதையையும் அவரே எழுதியுள்ளார்.

கஜானா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பிரபாகரன் நடித்துள்ளதோடு, அவருடன் வேதிகா, ஜோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளார்கள்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பேரரசர்  ஒருவரால்  புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இளைஞர்களின் படை ஒன்று களமிறங்குகிறது.


இவ்வாறு காட்டில் களம் இறங்கும் இளைஞர்களின் சாகச பயணத்தையும், அந்த கஜானாவை காப்பாற்றும் பயணத்தில்  பேய், பாம்பு, புலிகள் என அங்கு நடக்கும் அட்டகாசங்களையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திகில் நிறைந்த மற்றும் காமெடி காட்சிகளுடன் சொல்லியுள்ளது கஜானா திரைப்படம்.

இந்த நிலையில் தற்போது கஜானா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகியுள்ளது. இதோ டிரைலர்,


Advertisement

Advertisement