• Dec 25 2024

பட்டைய கிளப்ப தயாராகுங்கள்... தீபாவளி முன்னிட்டு சரவெடியாய் திரைக்கு வரும் புதியபடங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

எதிர் வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு அதிரடியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது.  எந்த நடிகர்களின் படங்கள் திரைக்கு வருகிறது என பார்ப்போம் வாங்க. 


தீபாவளி தினத்தந்து சினிமா ரசிகர்கள் அனைவரும் என்ன படம் அன்றைய நாளில் வெளிவருகிறது என ஆவலுடன் காத்துகொண்டு இருப்பார்கள். அந்தவகையில் முன்னணி நடிகர்களின் படங்கள் சாதாரணமான நாட்களில் வெளிவந்தாலே அது அவர்களுடைய ரசிகர்களுக்கு தீபாவளி தான் அப்படி இருக்க  தீபாவளி அன்றே வெளிவந்தால் அது எப்படி இருக்கும். அப்படி ரசிகர்கள் 2023 தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். 

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜிகர்தண்டா. இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தலைப்பில் வெளியாகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


அடுத்ததாக ராஜூ முருகன் இயக்கத்தில் முதல் முறையாக கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ஜப்பான். வழக்கமான தனது இயக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டு ஜப்பான் படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார் என டிரைலர் பார்க்கும்போது தெரிகிறது. கார்த்திக்கின் இந்த திரைப்பட வருகைக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள் 


மற்றும் விக்ரம் மற்றும் ஸ்ரீ திவ்யா இணைந்து நடித்துள்ள படம் ரைடு. இப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமும் தீபாவளி திருநாளிலே வெளியாக உள்ளது. 


பாலிவுட் கலக்கிய திரைப்படங்களில் ஒன்று டைகர். பார்ட் 1 மற்றும் பார்ட் 2 இரண்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வருகிற 12ஆம் தேதி தீபாவளி அன்று டைகர் 3 படத்தை வெளியிடுகிறார்கள். இந்தமுறை தீபாவளியை புதிய படங்களுடன் கொண்டாடுவதற்கு அனைவரும் தயாராக இருங்கள்.  

Advertisement

Advertisement