• Dec 26 2024

பாக்கியா தொடர்பில் கோபிக்கு தெரிய வந்த உண்மை! செழியனுக்காக ஜெனி செய்த காரியம்? அசிங்கப்பட்ட ராதிகா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன  நடக்கப்போகின்றது என்பதனைப் பார்ப்போம்.

அதில், நன்றாக குடித்துவிட்டு வரும் கோபி, வீட்டிற்கு உள்ளே செல்லும் போது யாருக்கும் தெரிய கூடாது என பதுங்கி பதுங்கி செல்ல, ஈஸ்வரி பார்த்துவிட்டு கூப்பிடுகிறார்.

இவ்வாறு அம்மா, அப்பாவுடன் இருக்கும் கோபியை சாப்பிட வருமாறு ராதிகா அழைக்க, அவர் பேச முடியாமல் ஊமை பாஷையில் கதைக்க, குடிச்சி இருக்கீங்களா என ராதிகா கேட்க, மாட்டிகிட்டு முழிக்கிறார். எனினும் ஈஸ்வரியிடம் தொண்டை வலி என் சொல்லி சமாளிக்கிறார்.


சுடுதண்ணில உப்பு போட்டு குடிச்சா எல்லாம் சரியாகிடும் என ஈஸ்வரி சொல்ல, சமையலறைக்கு சென்று குடிபோதையில் தானே எல்லாம் செய்கிறார். இதனை ராதிகாவும், பாக்கியாவும் பார்த்துக் கொண்டு இருக்க, என்ன தண்ணி சுடவே இல்லை என கையை வைத்து பார்க்கிறார்.


இதை தொடர்ந்து, கோபியை அழைத்துக் கொண்டு ரூம்க்கு போன ராதிகா, என்ன பாக்கியா முன்னாடி அசிங்கப்படுத்திருங்க என திட்டுகிறார். மேலும் ஏன் இப்போ குடிச்சீங்க என காரணத்தை கேட்க, பசங்களை நினைத்து கவலை என்று சொல்லுகிறார். 


மறுபக்கம், செழியன் அனுப்பிய கடிதத்தை எடுத்துப் பார்க்கிறார் ஜெனி, அந்த நேரத்தில் அவரது அப்பா வந்து பறித்து எடுக்க, அதை கொடுக்குமாறு ஜெனி கெஞ்ச, அந்த கடிதத்தை கிழித்து எறிகிறார் ஜெனியின் அப்பா.


இன்னொரு பக்கம், பாக்கியாவும் ராமமூர்த்தியும் வொர்கிங் போகின்றனர். அவருடன் கோபியும் வருகிறார். இதன் போது நேற்று சாராயத்தை குடிச்சிட்டு நாடகம் ஆடுறியா என திட்டுகிறார்.

அந்த நேரத்தில் பாக்கியாவை பார்த்த இருவர், மினிஸ்டர் உங்களை பாராட்டிய வீடியோ பார்த்தோம். இனி என்ன ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க போறீங்களா என கதைத்துக் கொண்டிருக்க கோபி ஆச்சரியமாக பார்க்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement