• Dec 28 2024

சுந்தர்.சியின் அரண்மனையை கூகுள் கூட பேய் படம்னு அக்சப்ட் பண்ணிட்டா? தீயாய் பரவும் தகவல்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்பவர் தான் நடிகர் சுந்தர் சி. இவர் பிரபல நடிகையான குஷ்புவின் கணவர் ஆவார்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் பெரும் அளவில் வெற்றி படங்களாகவே காணப்படுகின்றன. அதிலும் தற்போது இவர் பேய் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

2014 ஆம் ஆண்டில் அரண்மனை படத்தை இயக்கிய சுந்தர்.சி அதன் இரண்டாவது பாகத்தை நான்கு வருடங்கள் கழித்து வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து அரண்மனை 3 பாகம், இந்த ஆண்டு அரண்மனை படத்தின் 4 பாகம் என நான்கு பாகங்களையும் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார் சுந்தர்.சி. இந்த படங்கள் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தன.


இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் மூன்றாவது பாகம் வெளியானது. தற்போது googleலில் பக்கவான ஹரர் திரில்லர் படம் எது என கேட்டால் அது சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்தை ஹாரர் படமாக அனுமதித்துள்ளது.

தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, மீண்டும் அரண்மனை மூன்றாவது பாகத்தை பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement