• Dec 25 2024

இடி போல் விழும் பிரச்சினை! சமாளிக்க முடியாமல் திணறும் பாக்கியா! மகிழ்ச்சியில் கோபி!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா எடுத்த ஆர்டர் மூலம் ஏதாவது பிரச்சினை பண்ணி ஹோட்டலை இழுத்து மூட வேண்டும் என்பதற்கு ஏற்ப கோபி பக்கவாக பிளான் போட்டுவிட்டார். அதன்படி பாக்யா ஹோட்டலில் வேலை பார்க்கும் ஆனந்த், பாக்கிய சமைத்த சாப்பாடுகள் அனைத்திலும் கலப்படத்தை ஏற்படுத்தி விட்டார். இது எதுவும் தெரியாத பாக்யா, சமைத்த சாப்பாடுகள் அனைத்தையும் டெலிவரிக்கு  அனுப்பி வைத்துவிடுகிறார். 


அந்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட்ட மக்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக பிரச்சனை சந்தித்து வரும் நிலையில் பாக்யா ஹோட்டலுக்கு நேரடியாக அனைவரும் வந்து பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இதைக் கேட்டதும் பாக்யா என்ன நடக்குது என்று தெரியாமல் அதிர்ச்சியாக்கி இருக்கிறார்.


இந்த பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்ததால் பத்திரிகை மற்றும் டிவி மூலம் ஈஸ்வரி ஹோட்டலில் சாப்பிட்ட மக்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனை என்ற செய்திகள் வர ஆரம்பித்துவிட்டது ஒட்டுமொத்த மக்களும் பிரச்சனை பண்ணி பாக்யாவை கேள்வி கேட்டு ரகளை பண்ணுவதை பார்த்து சந்தோஷப்படுகிறார்.


அத்துடன் மேல் அதிகாரிகளும் வந்து ஹோட்டலை சோதனை நடத்தி வருகிறார்கள். இதையெல்லாம் ஹோட்டலில் இருந்து ஆனந்த் வீடியோ எடுத்து கோபிக்கு அனுப்பி கொண்டிருக்கிறார். இந்த விஷயம் அனைத்தும் டிவி மூலம் வந்ததால் ஈஸ்வரி, செழியன், ஜெனி அனைவரும் வீட்டில் இருந்தபடியே பார்க்கிறார்கள். தற்போது பாக்யாவிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement