• Dec 25 2024

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்! பலியாடாக சிக்கிய திமிங்கலம்! BIGG BOSS - 8

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஆட்டத்தை நின்னு கவனமாக விளையாடுகிறார்கள். இதில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வெளியில் இருந்து ரிவ்யூ கொடுத்த ரவீந்தர் உள்ளே போய் புத்திசாலித்தனமாக ஒவ்வொருவரையும் தனக்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தி விளையாடி வருகிறார்.


முதல் நாளே வெளியேறிய சாச்சனா சர்ப்ரைஸ் ஆக மறுபடியும் வீட்டிற்குள் வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் யார் வெளியேறுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது என்று பிக் பாஸ் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் கருத்து கேட்டிருக்கிறது. 


அதில் முக்கால்வாசி போட்டியாளர்கள் சொன்னது ரவீந்தர், சௌந்தர்யா, ரஞ்சித் இவர்களில் யாராவது போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் மக்களின் ஓட்டு கணிப்பின்படி கம்மியான வாக்குகளை பெற்றது அருண்பிரசாத் மற்றும் ஜாக்குலின் தான். இந்த சூழ்நிலையில் தற்போது இந்த வாரம் யார் வெளியே போயிருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. 


ரவிந்தர் என்னதான் புத்திசாலித்தனமாக விளையாடினாலும் அவருடைய உடல் உழைப்பு அங்கே சப்போர்ட் கொடுக்க முடியாததாலும் அவ்வப்போது உடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு வருவதால் இந்த வாரத்தில் அவரை வெளியேற்றலாம் என்று பிக் பாஸ் முடிவெடுத்திருக்கிறது.இதனை விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்க போகிறார் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement