• Apr 28 2026

ஜிவி பிரகாஷ் , துல்கர் சல்மான் கூட்டணி! போஸ்டருடன் வெளியாகிய திகதி!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புது புது கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்க கூடிய நடிகர்கள் இருப்பது போன்று மலையாளத்தில் முன்னணியாக இருந்தாலும் வித்தியாசமான கதைகளில் நடிக்க கூடியவர் துல்கர் சல்மான் ஆவார். 


முன்னணி மலையாள நடிகராக இருக்கும் மம்முட்டியின் மகனே துல்கர் சல்மான் ஆவார். சினிமா பின்னணியுடன் சினிமா துறைக்குள் வருகை தந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். மலையாள தில் முன்னணியாக இருக்கும் இவர் சீதாராமம் படத்தின் மூலமே இந்திய அளவில் பேசப்பட்டார். 


இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். குறித்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அதிக எதிர் பார்பை உருவாக்கியுள்ள நிலையில் இதன் 1ஸ்ட சிங்கிளானது வருகின்ற ஜூன் மாதம் 19 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement