• Dec 26 2024

திருடப்போன திடீரென வந்த யானைக்கூட்டம்.. அதிர்ச்சியில் ஜிவி பிரகாஷ்: ‘கள்வன்’ டிரைலர்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


ஜிவி பிரகாஷ் நடித்த ‘கள்வன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் உள்ள காட்சிகளை பார்க்கும் போதே உடனே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் மற்றும் தீனா ஆகிய இருவரும் ஒரு முக்கிய திருட்டை செய்ய ஒரு கிராமத்திற்கு நுழைந்துள்ள நிலையில் திடீரென ஒரு யானை அவர்களை வழிமறிக்கிறது, அதன் பின்னர் அந்த யானையின் பின்னே ஒரு யானைக்கூட்டம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடையும் ஜிவி பிரகாஷ்  மற்றும் தீனா அந்த யானையிடம் இருந்து தப்பிக்க ஓடுகின்றனர். அவர்கள் தப்பித்தார்களா? திட்டமிட்டு வந்த திருட்டை செய்தார்களா? போலீஸ் என்ன செய்தது? போன்ற கேள்விகளுக்கு ‘கள்வன்’ பார்த்தால் விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக ’லவ் டுடே’ நாயகி இவானா நடித்திருக்கும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கிறார். முழுக்க முழுக்க காட்டில் படமாக்கப்பட்ட இந்த படம் நிச்சயம் ஜிவி பிரகாஷின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நேற்று வெளியான ஜிவி பிரகாஷின் ‘ரிபெல்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement