• Dec 26 2024

"உங்களை ஹாரிஸ் மாம்ஸ்னு சொல்றாங்களே..." என்ற கேள்விக்கு ஜாலியாக பதிலளித்த ஹாரிஸ் ஜெயராஜ்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2001 -ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. அதை தொடந்து மஜ்னு, சாமி, கோவில், லேசா லேசா, காக்க காக்க என தொடர்ந்து ஹிட் ஆல்பங்களாக கொடுத்தார்.


இதையடுத்து இவர் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பாடல்கள் இசையமைத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ்- கவுதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.


ஹாரிஸ் ஜெயராஜ் நிகழ்வொன்றில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஜாலியாக பதிலளித்துள்ளார். அதாவது, சமூக வலைத்தளங்களில் "உங்களை ஹாரிஸ் மாம்ஸ்னு சொல்றாங்களே..." இதுக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க அப்பிடீன்னு கேட்டதுக்கு  ஜாலியாக பதிலளித்துள்ளார்.


அவர் கூறியதாவது,என்னோட டுவிட்டர் கணக்கையே ஹாக் பண்ணிட்டாங்க. ஒரு நாலு மாசமா டுவிட்டர் இல்லாம இருக்கன். ரசிகர்கள் அப்படி கூப்பிடுவது அவர்களின் அன்பு என்று கூறியுள்ளார்.  தன்னோட ஸ்டைல சிரிச்ச முகத்தோட ஜாலியாக பதிலளித்திருக்கின்றார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த காணொளி தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement