• Dec 25 2024

அவர் ஒரு இன்ட்ரஸ்டிங் பேர்சன்ட்.. எனக்கு பேவரிட்டும் அவர் தான்..? பிக் பாஸ் ஐஷு வழங்கிய முதல் பேட்டி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போட்டியாளர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் ஐஷு.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நிக்சனோடு காதல் விவகாரத்தில் சிக்க, ஐஷுவின் பெற்றோர் ஒரு நாள் பிக் பாஸ் செட்டுக்கே நேரடியாக வந்து தமது பிள்ளையை வெளியே அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து அடுத்த வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐஷு வெளியேறினார். அதற்கு பின் சோசியல் மீடியாவில் மட்டும் ஆக்டிவாக காணப்பட்டார்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவுற்று பல நாட்களைக் கடந்த நிலையில், தற்போது தனது முதலாவது பே ட்டியை வழங்கியுள்ளார் ஐஷு. அதன்படி அவர் கூறுகையில்,

நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே  வந்து பார்த்தபோது என்னை பற்றி நிறைய நெகட்டிவ்வான கமெண்ட்ஸ், பதிவுகளை தான் பார்த்தேன். ஆனால் போகப் போக நான் ரியல் வெல்ட்டை பார்த்தேன்.


நிறைய பேர் என்கிட்ட,  நீங்க அப்படி பண்ணி இருக்கலாம்.. இப்படி பண்ணி இருக்கலாம் என்று சொல்லும்போது, பிக் பாஸ்ல நிறைய டைம் எடுத்து என்னை பார்த்து இருக்காங்க என்று புரிஞ்சுது.

பிக் பாஸ் வீட்டுல யார் உண்மையாக இருந்தார்கள் என்று கேட்க, நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரைக்கும் எல்லாரும் உண்மையா தான் இருந்தாங்க. அங்க பொய்யா இருக்க முடியாது என்றார்.

மேலும், பிக் பாஸ் வீட்டில் ஸ்டராங் என்டா அது மாயா தான். டாஸ்க் என்றாலும் சரி, எமோஷனல் ரீதியா, ஒரு விஷயத்தை சொல்றதாக இருந்தாலும் மாயா தான் ஸ்ட்ராங்கா இருந்தாங்க.


அவங்களுக்கு பிறகு அர்ச்சனா, விசித்ரா மேம் அவங்களுக்கு எப்ப எப்படி பேசணும் என்று நல்லா தெரியும். அதோட எனக்கு பேவரிட் பர்சன்ட் என்றா அது பிரதீப் தான். அவர் ஒரு இன்ட்ரஸ்டிங்கான பேர்சன்ட். அதேபோல மாயாவையும் ரொம்ப பிடிக்கும்.

பிக் பாஸ் வீட்ல என்ன கத்துக்கிட்டீங்க என்று கேட்க, பிக் பாஸ்ல எனக்கு பர்சனல்லா எல்லாம் நான் நிறைய லிசின்பண்ணினேன். எப்படி இருக்கணும் எப்படி இருக்க கூடாது, ஒரு சில விஷயம் கேட்டா மட்டும் போதாது கண்ணால பார்த்த பிறகு தான் நம்பனும் என்று கத்துக்கிட்டேன்.

என்னை திரும்பவும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பி 100 நாள் இரு என்று சொன்னாலும் நான் உண்மையா ரொம்ப ஹாப்பியா இருப்பேன். 


நாம் பிக் பாஸ்ல இருந்து வெளியில் வந்த பிறகு யாரையும் மீட் பண்ணல. பிக் பாஸ் வீட்டுல மொபைல் இல்லாம இருந்த அந்த மூமென்ட்ட மிஸ் பண்றேன்.

அதோட கமல் சாரோட இருந்த அந்த மூவ்மெண்ட்... ஆரம்பத்திலயும்  சரி கடைசியாகவும் சரி அவர் கூட பயணித்த அந்த பொழுது எனக்கு பிடிச்சிருந்துச்சு.

இறுதியாக உங்களின் அடுத்த என்ன பிளான் என்ன என்று கேட்க, இப்போதைக்கு நான் பிரேக் எடுத்து இருக்கேன். இனி என்ன பிளான் பண்ணாலும் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

Advertisement

Advertisement