இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 ரிலீஸாகி 3 நாட்களை கடந்துள்ளது. நாளுக்கு நாள் எகிறும் இத்திரைப்படத்தின் வசூல் விபரம் குறித்து பார்ப்போம்.
நடிகர் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடுதலை 2. இப்படத்தில் மஞ்சு வாரியர், ராஜிவ் மேனன், கவுதம் மேனன், சேத்தன், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெளியாகிய நாள் முதல் நல்ல விமர்சனத்தினை பெற்று வருகிறது.
அதே வேலை வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.இந்நிலையில் 3 நாட்களை கடந்துள்ளது விடுதலை2 தற்போது வரையில் 30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் காலங்களில் இன்னும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!