• Dec 25 2024

பரபரப்பான செய்தி... KGF' யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்... அநியாயமாக உயிரை விட்ட 3 ரசிகர்கள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் பான் கே.ஜி.எப் படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.கடந்த சில ஆண்டுகளாக கன்னட திரையுலகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் உள்ள முக்கிய முகங்களில் ஒருவராக வலம்வருகின்றார். 


உலகம் முழுவது ரசிகர்களின் ஆதரவை பெற்ற  யாஷ் தன்னுடைய 38 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கட்டவுட் வைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாட்டக மாநிலம்  கதக் மாவட்டம் சுரங்கி கிராமத்தில்ஹனுமந்தா ஹரிஜன்,முரளி நடவின்மணி,நவீன் காஜி ஆகிய இளைஞர்கள்  எதிர்பாராத சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்பொழுது வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement