• Feb 25 2025

விஜயைப் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு... KGF நடிகர் அதிர்ச்சி கருத்து..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக விளங்கும் தளபதி விஜய், தனது நடனத்தால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடனத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளார்.

அவருடைய ஸ்டைல் மற்றும் எனர்ஜி போன்றவற்றைப் பார்த்து  பல பிரபல நடனக்கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், KGF புகழ் ராக்கி பாய் சமீபத்தில் விஜயின் நடனத்தைப் பற்றிய தன்னுடைய கருத்துக்களை கூறியுள்ளார்.


ராக்கி பாய் கூறியதாவது , "இந்த வயதிலும் விஜய் சாரின் மாஸ் நடனத்தை பார்த்து நான் ஆச்சரியமடைகின்றேன். மேலும் அவர் எனக்கு மிகப்பெரிய  இன்ஸ்பிரேஷன் என்றதுடன் அவரைப் போல் நானும் நடனமாட நினைத்தேன், ஆனால் முடியவில்லை!" என்று தன்னுடைய மனஉணர்வை  வெளிப்படுத்தியுள்ளார்.

KGF புகழ் ராக்கி பாய், இந்திய திரையுலகில் அமோக வளர்ச்சியடைந்த நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் வெளியான KGF 1 மற்றும் KGF 2 ஆகிய படங்கள் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்நிலையில், அவர் விஜயின் நடன திறமை குறித்து பாராட்டுவது ஒரு முக்கியமான விஷயமாக காணப்படுகின்றது.


இந்த புகழ்ச்சி விஜய்க்கு ஒரு பெரிய அங்கீகாரமாக உள்ளது என பலரும் கூறுகின்றனர். அத்துடன் அவரது நடன திறமை மற்றும் ஸ்டைல் என்பன ஏனைய நடிகர்களையும் பயிற்சியில் ஈடுபட வைக்கும் அளவிற்கு மாறியுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

Advertisement

Advertisement