தமிழ் திரையுலகில் முதன்மையான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜித் குமார், தனது சமீபத்திய விடாமுயற்சி திரைப்படம் அதிகளவு வசூலை பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்த்து இருந்தார். எனினும் , வெளியான இரண்டு வாரங்களில் ரூ.147.5 கோடி வசூலைப் பெற்றிருந்தாலும், தற்போது படம் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் ரசிகர்கள் முதல் நாளிலேயே திரையரங்குகளுக்கு கூட்டமாக திரண்டு வந்திருந்தனர். விடாமுயற்சி படம் அஜித் குமாரின் மாஸான வசனங்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் ஆகியவற்றால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. வெளியீட்டின் முதல் வாரத்தில் உலகளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இதுவும் காணப்பட்டது.
ஆனால், திடீரென இப்படத்தின் வசூல் குறையத் தொடங்கியது. இதற்கு சில முக்கியமான காரணங்கள் பின்னணியில் இருக்கலாம் என படக்குழு கூறுகின்றது. அதுமட்டும் இல்லாது அஜித் படத்தின் வசூல் ஆரம்பத்தில் வெற்றிகரமாக இருந்த போதிலும், தற்போது அது எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் அஜித் குமாரின் தனித்துவமான ஸ்டைல் மற்றும் மாஸான கதையின் மூலம் அடுத்து நடிக்கவிருக்கும் படங்களில் மாபெரும் வெற்றியை அடைந்து கொள்வார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!