நடிகர் ரோபோ சங்கர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் "விசுவாசத்தின் சுவாசம் என பதிவிட்டு நடிகர் அஜித்குமாருடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இது தற்போது தல ரசிகர்களிடத்தே வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி போன்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அத்தோடு கார் பந்தையங்களிலும் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் இருந்து துபாய்க்கு செல்ல வந்திருந்த அஜித்க்குமாரை ரோபோ ஷங்கர் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரது இன்ஸ்டா தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் " நீண்ட நாட்களுக்கு பிறகு விஸ்வாசத்தின் சுவாசத்தை சுவாசித்தேன். அன்புடன் அஜித் என்னிடம் நலம் விசாரித்தார். புது வருடத்தின் ஆரம்பம் AK உடன் சென்னை விமானநிலையத்தில் எதிர்பாரா சந்திப்பு. Happy new year to all "என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Listen News!