• Dec 25 2024

அண்ணன் முகத்தை கடைசியா பார்க்க முடில- விஜயகாந்த் சமாதியில் தேம்பித் தேம்பி அழுத நடிகர் சூர்யா

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமாகிய விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இறப்புக்குள்ளானார். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய சமாதிக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சரத்குமார், கார்த்தி உள்ளிட்டவர்கள் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு விஜயகாந்த் குறித்த தங்களது அனுபவங்கள் மற்றும் வருத்தங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.


விஜயகாந்த் நினைவிடம் சென்ற சூர்யா, அங்கு தேம்பி தேம்பி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, "அண்ணனைப் போல யாரும் கிடையாது, இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.

 எப்போதும் அவரின் நினைவு இருக்கும், நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது" என்றார்.



Advertisement

Advertisement