• Dec 25 2024

பணப்பெட்டியை பூர்ணிமா எடுக்க காரணம் என்ன தெரியுமா? வெளியான ரகசிய தகவல்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற  நிகழ்ச்சியில் பலராலும் பார்க்கப்படுகின்ற  நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்பொழுது பிக்பாஸ் 7  நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டு 90 நாட்களை கடந்துவிட்டது.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.

இப்போது பிக்பாஸ் 7 வீட்டில் 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள், இதில் இருந்து யார் இந்த வாரம் வெளியேறுவார், வெற்றிப் பெறுபவர் யார் என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம். 

தற்போது பிக்பாஸ் வீட்டில் அனைவரும் எதிர்ப்பார்த்த பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சங்களுடன் பூர்ணிமா வெளியேறினார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றது.


அதன்படி, பணப்பெட்டி தொடர்பில் மாயாவும் பூர்ணிமாவும் பேசிய விஷயங்கள் வைரலாகி உள்ளது.

அதில்,  பூர்ணிமா சொன்ன விஷயம் மாயாவை மட்டுமில்லாம எல்லாரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கென்றே சொல்லவேண்டும்.

அதாவது, பூர்ணிமா கிட்ட பேசிய மாயா,  ஏன் நீங்க பணப் பெட்டியை எடுக்க இப்பிடி யோசிக்கிறீங்க, அதுக்கு  பூர்ணிமா சொல்ராங்க நான் ஒரு முறை சொன்னன் மக்களா என்ன வெளியில அனுப்பும் வரைக்கும் உள்ள இருப்பன் அப்பிடின்னு சொல்லீருந்தன். ஆனா இப்ப நான் பணப்பெட்டிய எடுத்திட்டு வெளிய போனா என்ன தப்பா கதைப்பாங்க... அப்பிடின்னு பூர்ணிமா சொல்ல,


அதுக்கு மாயா,  அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்ல நீங்க எடுங்க இது விளையாட்டு தானே...அதோட எதுக்காக நீங்க பணப்பெட்டிய எடுக்கணும் என்டு நினைக்கிறீங்கன்னு கேட்க,  வீட்ல எல்லாரும் நான் தான் வெளிய போவன்னு நினைச்சிட்டு இருக்காங்க அதனால நானே பணத்தை எடுத்திட்டு போக போறேன்னு சொல்லிடு இருக்காங்க  பூர்ணிமா.

பூர்ணிமா சொன்ன விஷயம் தற்பொழுது ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement