• Dec 26 2024

எனக்கு ஜார்ஜ் மரியானை பார்த்து சிரிப்பு தான் வந்துச்சு- லியோ வெற்றி விழாவில் வைச்சு செய்த மன்சூர் அலிகான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் - லோகேஷ் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் லியோா. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் 550 கோடியை கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இவர்களில் ஜார்ஜ் மரியான் கேரக்டர் என்ட்ரியான பின்னர் தான் லியோ LCU-ல் கனெக்ட் ஆகும். இதனால், இனிவரும் தனது LCU படங்களில் ஜார்ஜ் மரியானின் நெப்போலியன் கேரக்டர் இருக்கும் என லோகேஷ் கூறியிருந்தார். இந்நிலையில், லியோ வெற்றி விழா நிகழ்ச்சி நேற்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். 


விஜய்யின் லியோ ப்ளாஷ்பேக் காட்சிகளை விவரிப்பார் மன்சூர் அலிகான். ஆனால், லியோவில் தனது கேரக்டரில் எந்த முக்கியத்துவம் இல்லை என தனக்குத் தானே ட்ரோல் செய்தார், இப்போது ஜார்ஜ் மரியானையும் வெளுத்து வாங்கியுள்ளார். அதாவது விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்க தமிழ்நாட்டில் இருந்து வரும் போலீஸாக நெப்போலியன் என்ற கேரக்டரில் ஜார்ஜ் மரியான் என்ட்ரி கொடுப்பார்.

 கைதி படத்தில் இதே நெப்போலியன் கேரக்டரில் மாஸ் காட்டியிருப்பார் ஜார்ஜ் மரியான்.லியோவில் அவரை ட்ரோல் செய்துள்ள மன்சூர் அலிகான், "காஷ்மீர்ல பிரச்சினைன்னு வரும்போது கேப்டன் விஜயகாந்த் மாதிரி யாரோ வருவார்ன்னு நினைச்சேன். ஆனா, இங்க ஜார்ஜ் மரியான் வந்ததும் தியேட்டரே அதிருது. ஆனா எனக்கு ஜார்ஜ் மரியானை பார்த்து சிரிப்பு தான் வந்துச்சு" என லியோ வெற்றி விழா மேடையிலேயே ஓபனாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement