• Dec 24 2024

நான் சிங்கிள் மதராகத்தான் கஷ்ட்டப்பட்டேன்! ஷாரிக் ஒரு நல்ல அப்பா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக உள்ளார்கள் உமா ரியாஸ்-ரியாஸ் கான். இவர்கள் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் கலக்கி உள்ளார்கள்.  இவர்களது மூத்த மகன் ஷாரிக் சினிமாவில் நடிக்க களமிறங்கினாலும் அவ்வளவாக பெரிய வாய்ப்பு வரவில்லை. 


எனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்துகொண்டு விளையாடினார், அதன் பின்னும் அவருக்கும் சரியாக வாய்ப்புகள் அமையவில்லை. சமீபத்தில் இவர் மரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஷாரிக்கு இது முதல் திருமணம் என்றாலும் மரியாவிற்கு இது மறுமணம்.


அவருக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகள் இருக்கிறார். அண்மையில் ஷாரிக் மற்றும் அவரது மனைவி மரியா ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் மரியா பேசும்போது, நான் சிங்கிள் மதராகத்தான் கஷ்டப்பட்டு என் மகளை வளர்த்து வந்தேன். என் மகள் தான் எனக்கு முக்கியமாக தெரிந்தால், அதனால்தான் நான் இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை. 


வருபவர் என் மகளை ஏற்றுக் கொள்ளலாம், என் மகள் அவரை அப்பாவாக ஏற்றுக் கொள்வாரா என்கிற பயம் இருந்தது, ஆனால் ஷாரிக் என் மகளை நன்றாக பார்த்துக் கொண்டார். அதைப் பார்த்து தான் எனக்கு அவர் மீது காதலே வந்தது, ஷாரிக் ஒரு நல்ல கணவராக இருப்பதை விட ஒரு நல்ல அப்பாவாக இருக்கிறார் என கூறியுள்ளார். 



Advertisement

Advertisement