• Dec 25 2024

சப்ரைஸ் என்றி கொடுத்த சூப்பர் ஸ்டார்! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8ன் 3 வைத்து ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவில் முன்னணி நடிகர் ஒருவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரை போட்டியாளர்கள் ஆர்வத்துடன் வரவேட்கின்றனர். 


பிக் பாஸ் வீட்டுக்கு இன்று நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்துள்ளார்.  தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கும் அமரன் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார்.  போட்டியாளர்கள் அவரை ஆர்வத்துடன் வரவேற்று அன்பை பரிமாறி கொண்டனர். 


பின்னர் அவர்களுக்கு அமரன் ட்ரெய்லர் போட்டு காட்டி படம் தொடர்பான விளக்கத்தை கொடுத்தார். அமரன் திரைப்படம் எமோஷனலை வெளிப்படுத்தக்கூடிய படம் எல்லோருடைய சப்போட்டும் வேணும் என்று கூறினார் பின்னர் அமரன் திரைப்படத்திற்க்காக கேக் வெட்டி போட்டியாளர்கள் வாழ்த்து கூற அவர்களுக்கு இனிப்பு வழங்கிவைத்தார் சிவகார்த்திகேயன். 


மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் எதிர் வரும் 31ம் திகதி தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனை ப்ரோமோஷன் செய்வதற்காகவே பிக் பாஸ் வீட்டுக்கு சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். 



Advertisement

Advertisement