• Dec 26 2024

கமல் சொன்னா பயப்படணுமா என்ன? மீண்டும் ரூல்ஸ் மீறல்! மீண்டும் ஆட்டம் ஆரம்பம்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி  ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த வாரம் அதிரடியாக 2 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தனர்.

இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுள் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இரண்டு போட்டியாளர்களும் பரபரப்பாக பேசப்படும் நபர்களாக மாறிவிட்டனர்.

ஏனென்றால், பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி ரூல்ஸ் மீறும் நபர்களாக இவர்கள் உள்ளதோடு, அடுத்தவர்களை நொண்டிப் பார்ப்பதில் கை தேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கமலும், இவர்கள் செய்யும் குறிப்பாக மாயா செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதே இல்லை என்ற குற்றசாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் மீண்டும் மாயா மற்றும் பூர்ணிமா மீண்டும் விதிமீறல் செய்து உள்ளனர்.

அத்துடன், கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கமல் அவர்களின்  பெயர் குறிப்பிட்டு மைக்கை முடியும், கழட்டி வைத்தும் பேச கூடாது என பூர்ணிமா, மாயாவிற்கு வார்னிங் கொடுத்து இருந்தார்.


எனினும், தற்போது அதை எல்லாம் சற்றும் காதில் வாங்காமல் மீண்டும் பூர்ணிமாவும் மாயாவும் விதிமீறல் செய்து உள்ளனர். 

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் மைக்கை முடி பூர்ணிமா, மாயா காதில் ஏதோ முனுமுனுத்து பேசி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா ஸ்மால் பாஸ் வீட்டிலுள்ள  பூர்ணிமாவிடம் பேசுவதற்காக அந்த வீட்டில் முழுமையாக இருந்து வருகிறார். 

எது எப்படியோ, ஏற்கனவே மாயா- பூர்ணிமாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள் இனி என்ன செய்வார்கள் என சொல்லத் தேவை இல்லை.



Advertisement

Advertisement