• Dec 25 2024

நான் ஒரு முட்டாளுங்க... பேசாதே என்றாங்க... புரட்டி புரட்டி எடுத்தாங்க... வெறுப்பை உருவாக்குவது யூடியூபர்கள்... சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. ஃப்ரீயா விடுங்க... பிரதீப் டுவிட் வைரல் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த பிரதீப் சமீபத்தில் பிக் பாஸ்  நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றபட்டார். அவருக்கு பலரும் வெளியில் ஆதரவு தந்தவனம் உள்ளனர். இந்நிலையில் அவர் தற்போது டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 


கமலஹாசன் தொகுத்துவழங்க கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் அதில் போட்டியாளராக பங்கு பற்றிய  பிரதீப் ஆண்டனி "பெண்கள் உரிமைகுறள்" என்று கமலஹாசன் அவர்களால் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.


பிரதீப் வெளியேறியதால் பல ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறது. மேலும் பலர் ஆதரவு தந்தவனம் உள்ளனர். பலர் இந்த முடிவு சரியானது என கூறிவருகின்றனர். இந்த வாதம் நடந்துகொண்டு இருக்கவே கமலஹாசன் தான் தவறான முடிவு எடுத்துள்ளார் என ஒரு சார்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


பிரச்சினைகள் ஒருபுறம் நடந்து கொண்டு இருந்தாலும் இன்று 69வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கமலஹாசனுக்காக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவொன்றை போஸ்ட் செய்து இருந்த பிரதீப் உண்மையில் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


தற்போது தனது டுவிட்டர் தளத்தில் பழையகால பாடலான நா ஒரு முட்டாளுங்க என்ற பாடலை பதிவிட்டு " அனைத்து ஆதரவாளர்களுக்கும். நான் நினைக்கிறேன், நான் இந்த BB பொருட்களை முடித்துவிட்டேன். வெறுப்பாளர்கள் இருப்பார்கள், வெறுப்பை உருவாக்குவது நிறைய யூடியூபர்கள் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வணிகமாகும். வாழட்டும். நான் எனது சொந்த உள்ளடக்கத்தை உருவாக்க விரும்புகிறேன், இதில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. ஃப்ரீயா விடுங்க. என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ பதிவு...