• Dec 24 2024

பாக்கியா தலையில் இடியை இறக்கிய இனியா..? மெல்ல மெல்லமாக ஜெயிக்கும் கோபி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபியும் செழியனும் வாக்கிங் போகும்போது மீட் பண்ணுகின்றார்கள். இதன்போது எழிலுக்கு ப்ரொடியூசரிடம் பேசி அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுக் கொடுத்ததாக கோபி செழியனிடம்  சொல்லுகின்றார்

இதனால் செழியன் மிகுந்த சந்தோஷத்தில் திகைத்துப் போய் நிற்கின்றார். மேலும் கூடிய விரைவில் உனக்கும் ஒரு வேலையை ரெடி பண்ணி தருவேன் என்று சொல்லுகின்றார். இதனால் நீங்கள் கிரேட் அப்பா என்று செழியன் கோபியை புகழுகின்றார்.

மேலும் தான் இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்ததாக ஒருபோதும் அவனுக்கு தெரிய வேண்டாம். இதை எப்படியாவது எழிலிடம்  கொடுத்து ப்ரொடியூசரை சந்திக்க சொல்லு என செழியனிடம் சொல்லுகிறார்.

இன்னொரு பக்கம் இனியா காலேஜில் டீச்சரை சந்திப்பதற்காக பாக்கியாவை கூட்டிப் போகின்றார். அங்கு இனியாவை டான்ஸ் மாஸ்டரிடம் சேர்த்து விடுமாறு டீச்சர் சொல்ல, பாக்கியாவும்  பிரபல டான்ஸ் மாஸ்டரிடம் கிளாசுக்கு சேர்த்து விடச் செல்கின்றார். ஆனால் அவர்கள் 15000 பீஸ் கட்டணும் என்று சொன்னதும் வீட்டில் போய் கதைத்து விட்டு வருகின்றேன் என்று பாக்யா இனியாவை கூட்டி வருகின்றார்.


ரோட்டில் வரும்போது இனியா பாக்கியாவிடம் கெஞ்சிக் கொண்டே வருகின்றார். ஆனாலும் பாக்கியா தன்னால் ஆயிரம் இரண்டாயிரம் என்றால் தர முடியும் 15,000 தர முடியாது என்று நிலைமையை புரிய வைக்கின்றார். ஆனாலும் இனியா அடம் பிடித்துக் கொண்டு வருகின்றார்.

இதனை கோபி பார்த்து விடுகின்றார். தான் என்ன என்று போய் விசாரித்து வருவதாக கிளம்ப, ராதிகா  இப்ப போக வேண்டாம் இனியாவுக்கு கால் பண்ணி கதையுங்க என்று தடுக்கின்றார். அதுவும் சரிதான் என்று கோபி காரை எடுத்து விட்டு செல்கிறார்.

இறுதியாக பாக்கியா ரெஸ்டாரண்டை ஆரம்பிக்க, வேலையாட்கள் இருவர் வரவில்லை அவர்கள் இனி வரமாட்டார்கள் என்று சொல்லுகின்றார்கள். அதன்பின் கஸ்டமர்ஸ் வருகிறார்களா  என்பதை பார்த்து சமையலை கால்வாசியாக குறைத்து பண்ணுங்கள் என்று பாக்கியா ஆர்டர் போடுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement