• Jun 13 2025

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை நிராகரித்த சூப்பர் ஸ்டார்..! அரசியல் தான் காரணமா..?

Mathumitha / 21 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு 70 வயது தாண்டியும் இந்த காலத்து ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்து வருகின்றார். வேட்டையன் பட வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் வெளியாகவுள்ளது.


இதனை முடித்த கையுடன் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கான வேலைகள் முடிந்ததும் அவர் ஒரு ஆறு மாதம் தற்காலிக ஒய்வு எடுக்க இருப்பதாக அறிக்கை விடுத்து இருந்தார்.  மேலும் இவர் இந்த காலகட்டத்தில் தனது சுய சரிதை எழுத இருப்பதாக தெரியவந்துள்ளது.


இந்த நிலையில் தற்போது பல தயாரிப்பு நிறுவனங்கள் இவரை வைத்து படம் பண்னுவதற்காக வரிசையில் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதிலும் முக்கியமாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் ரஜினி மறுப்பு தெரிவித்து வருவதாகவும் இதற்கான காரணம் தேர்தல் நெருங்குவதால் அரசியலுக்குள் சிக்காமல் அவர் விலகுவதற்கு நினைப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement