• Dec 25 2024

குக் வித் கோமாளி சீசன் 5 'பிக் பாஸ்' நிகழ்ச்சியாக மாற்றமா? விஜய் டிவியின் முடிவு என்ன?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த சீசனும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீரென வெங்கடேஷ் பட், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள். இதனால் அடுத்த சீசன் நடக்குமா? இல்லையா? என்ற குழப்பம் காணப்பட்டது.

இதை தொடர்ந்து, தாமுவுக்கு ஜோடியாக, குக் வித் சீசன் 5வது சீசனில் புதிய நடுவராக பிரபல நடிகரும், தொழில் அதிபரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ்  களம் இறங்கியுள்ளார்.


இந்த சீசனில் பங்குபெற்றும் போட்டியாளர்களாக யூடியூபர் இர்ஃபான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த், நடிகை திவ்யா துரைசாமி, பிரியங்கா, நடிகர் வசந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது.

இவர்களைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களான விஷ்ணு விஜய், பாண்டியன் ஸ்டோர் ஹேமா, சுனிதா, புகழ், குரேஷி, மோனிஷா மற்றும் விஜய் டிவி ராமர், நடிகர் கூல் சுரேஷ், தெய்வமகள் சீரியல் நடிகை ஆன ஷபி என்பவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.


இந்த நிலையில், குக் வித் கோமாளி 5வது சீசனில் பிக் பாஸ் சீசன் 5 மற்றும் சீசன் 7ல் பங்குபற்றிய  பிரபலங்கள் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதாவது பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவரும், விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான பிரியங்கா தேஷ்பாண்டே இம்முறை குக் வித் கோமாளியில் களமிறங்க உள்ளாராம்.

அதேபோல் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களான பூர்ணிமா மற்றும் தினேஷ் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குக் வித் கோமாளி சீசன் 5ல் பிக் பாஸ் பிரபலங்களின் பெயர்கள் அதிகமாக அடிபடுவதால் இது குக் வித் கோமாளியா? இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சியா? என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement