• Dec 25 2024

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் விசித்ராவுக்கு பலத்த அடி.. கடுப்பேத்தி ரசித்த பிரபலங்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7க்கான பிக்பாஸ் கொண்டாட்டம் ஒளிபரப்பப்பட்டு பலவிதமான கருத்துக்களை பெற்று வருகின்றது. 

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக ஏழு சீசன்களையும் கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஏழாவது  சீசன் கடந்த வருடம் தொடங்கப்பட்டு இந்த ஜனவரி மாதம் முடிவடைந்திருந்தது. இதில் கலந்துகொண்ட அர்ச்சனா டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்தே நடைபெறும் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் பெருமளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி  இருந்த நிலையில் இது முழுமையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது. 


பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், ஒவ்வொரு போட்டியாளர்களின் தனித்திறமைகளை காட்ட கூடியவாறான நிகழ்ச்சிகளும் நடைபெற்றதோடு அனைவரும் பேசுவதற்க்கான வாய்ப்பும் கிடைத்திருந்தது.


அதில் விசித்ரா பேசும்போது இந்த நிகழ்ச்சியில் விசித்ராவாக உள்ளே சென்று விச்சுமாவாக வெளியே வந்துள்ளதாகவும் , தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் தனது குழந்தைகளுக்கு விட்டுக்கொடுப்பதுதான் ஒரு அம்மாவின் இயல்பு என்றும்  குறிப்பிட்டார். "ஆனா அந்த அம்மா ஜெயிக்கிறதுக்காக ஆடுறது நியாயமா" என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு  விசித்ரா "அம்மாவை அம்மாவாக நினைத்திருந்தால் விட்டு கொடுத்திருக்கலாம் ஆனா அம்மாவை சும்மானு நினைத்ததால்  விளையாட வேண்டியதா போச்சு" என  அதிரடியா பதில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement