• Dec 26 2024

'அரண்மனை 4' படத்திலும் அதே கிளைமாக்ஸ் தானா? சற்றுமுன் வெளியான டிரைலர்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இதுவரை பல திரைப்படங்கள் வெற்றிபெற்று அதன் பின்னர் அடுத்த பாகம் தொடர்கிறது. அதிலும் குறிப்பாக பேய், பிசாசுகளை  மையமாக வைத்த த்ரில் திரைப்படங்களும் பல பாகங்களை கடந்துள்ன.

தமிழ் சினிமாவுக்கு அன்பே சிவம் , கலகலப்பு போன்ற பல மறக்கமுடியாத அருமையான திரைப்படங்களை கொடுத்தவர் தான் இயக்குனரும் , நடிகருமான சுந்தர். சி. 

இவர் தற்போது பாலிவுட்டிலும் பல படங்களை இயக்க தயாராகி உள்ளார். இவரது அற்புதமான இயக்கத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் தான் "அரண்மனை" ஆகும். இதன் வெற்றியை தொடர்ந்தே அடுத்த அடுத்த பாகங்கள் வெளியாகிய நிலையில், இதன் நான்காவது பாகமும் விரைவில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித்திரைப்படமாக இருக்கும் அரண்மனை படத்தின் அடுத்த பாகத்திற்கான டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.


பிரம்மாண்ட பொருட்செலவில் தமன்னா, ராசிக்கன்னா, யோகிபாபு, கோவை சரளா என பல முன்னணி நடிகர்களும் நடிக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் மிகவும் த்ரில்லாகவும் , அருமையாக கிராபிஸ் எடிட்டிங் செய்துள்ளார்கள் என்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது. 


இந்த திரைப்படத்தை பற்றி சுந்தர்.சி கூறுகையில் "இதில் சி.ஜி எடிட்டிங் எது உண்மை எது என்று கண்டுபிடிக்க இயலாத அளவிற்கு இருக்கும். இதில் பணியாற்றிய எடிட்டர்ஸ் எவரும் அந்நியர்கள் இல்லை நமது சென்னையில் உள்ள கலைஞர்களே" என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement