• Apr 24 2026

இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷனை அடித்து நொறுக்கிய ஆடு ஜீவிதம்! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பிருத்விராஜ் மற்றும் அமலாபால் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' படம் பெப்ரவரி 28ம் திகதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.

'ஆடு ஜீவிதம்'  படத்தின் கதைக்களம், வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும்  பிருத்விராஜ், தனது மனைவி அமலாபாலை  பிரிந்து பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் அவஸ்தை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக உடல் மெலிந்து ஓடாகத்தேய்ந்து தன்னை வருத்தி இதுவரை இல்லாத அளவுக்கு கஷ்டப்பட்டு நடித்துள்ளார்  பிருத்விராஜ். இந்த படத்துக்கு அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இந்தியாவில் ரூ.7.45 கோடி ரூபாவும், கேரளாவில் ரூ.6.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.40 லட்சமும், தமிழ்நாட்டில் ரூ.50 லட்சமும், தெலங்கானாவில் ரூ.40 லட்சமும், இந்தியில் 10 லட்சமும், உலகளவில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'ஆடு ஜீவிதம்' படத்தின் இரண்டாம் நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, கடந்த 28ஆம் தேதி வெளிவந்த இப்படம் இரண்டு நாட்களில் மட்டும் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement