• Dec 26 2024

ரோஜா சீரியல் நடிகருக்கு இப்படியொரு பரிதாப நிலையா? உடல் உறுப்பொன்றும் நீக்கம்..! கண்ணீர்மல்க பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடித்த நடிகர் தான் சக்கரவர்த்தி. இவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் சமீபத்தில் இடை பாலினத்தவர் என்ற சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

இவ்வாறு தனது உடம்பில் ஆணாகவும் பெண்ணாகவும் வலிகளை சுமந்து செல்லும் கடின பாதை பற்றி, பேட்டியொன்றில் சொல்லி உள்ளார். 

இவர் சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.


இந்த நிலையில், அவரது ஆணுறுப்பில் விந்துவும் மாதவிடாயும் வெளியேறியதால், அவருடைய ஆணுறுப்பை அகற்றியுள்ளனர். இதன் காரணமாக  மக்களிடம் சில வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். அதன்படி அவர் கூறுகையில்,

எனக்கு பத்தரை வயதாக இருக்கும் போதே எனது உடலில் மாற்றம் வர தொடங்கிவிட்டது. எனது ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வந்தது. அதற்கு அம்மா ஏதும் அடிபட்டு இருக்கும் என ஆறுதல் சொன்னார். எனினும் இது  தொடர்ச்சியாக மருத்துவரை அணுக, உங்களுக்கு கர்ப்பபை இருக்கிறது.இ நீங்க பெண்ணாக தான் இருக்கீங்க என்று சொன்னார்.


பிறகு சில வருடங்கள் கழித்து ஆணுறுப்பில் இருந்து விந்து வெளியானது. இதையறிந்த நண்பர்கள் கூட ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பதை எண்ணி கிண்டல் செய்தனர்.

இதை தொடர்ந்து, எனக்கு கர்ப்பபையை ஆபரேஷன் செய்யப்பட்டதோடு, ஆணுறுப்பையும் ஆபரேஷன் செய்து அகற்றி விட்டனர். பலவருடங்கள் வேதனையை மட்டுமே அனுபவித்தேன். இதன் காரணமாக, நடிப்பு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்றார்.

எனினும், யாரும் உடலில் சிறு பிரச்சனை என்றாலும் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடாதீர்கள் என அட்வைஸ் செய்துள்ளார்.


 


 

Advertisement

Advertisement