• Dec 26 2024

பாக்கியலட்சுமியின் பிரச்சனைக்கு இப்படியொரு முடிவா? மொத்தமா குவிந்த சேனல்கள்! கோபிக்கு நெத்தியடி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான எபிசோட் வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, வீட்டிற்கு வந்த எழிலும், பழனிச்சாமியும் பாக்கியாவிடம், கோதண்டராமனின் போட்டோவை காட்ட, இவர் தான் வீட்ட வந்து பிரச்சனை செய்தவர் என பாக்கியாவும், ராமமூர்த்தியும் சொல்கின்றனர்.

அந்த இடத்திற்கு, கோதண்டராமனும் வர அவருடன் செழியன் சண்டைக்கு போகிறார். இப்படி தான் கேண்டினுக்கு சீல் வைப்பியா என கேட்டு திடுக்கின்றனர்.

எனினும், எதற்கும் அசராதவராக அவர் நின்றதோடு, எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, நீங்க என்ன வேணும் என்டாலும் பண்ணுங்க.. நான் தான் கம்பிளைன்ட் கொடுத்தன்.. மரியாதையா வந்து வீட்ட கேட்டப்போ கொடுத்து இருக்கலாம் தானே.. இனி எப்படி கேண்டின் நடத்துறீங்க என நானும் பாக்கிறேன் என சொல்ல எழிலும் சண்டை போடுகிறார். ஆனாலும் பழனி தடுக்கிறார். 

இதை தொடர்ந்து, பாக்கியாவின் உணவின் தரத்தை செக் பண்ண ஆபிசர்கள் வருகின்றனர். கூடவே மீடியா ஆட்களும் வருகின்றனர்.


இந்த நிலையில், அனைத்து உணவுகளையும் செக் பண்ணி பார்த்த ஆபிசர்கள் ஆச்சரியம் அடைந்துவிட்டனர்.அதற்கு காரணம் இதுவரையில் இப்படியொரு தரமான உணவை பார்த்தது இல்லை. ஆதாரமும் இல்லை என சொல்ல, அனைவரும் சந்தோஷத்தில் பெரும்மூச்சு விடுகின்றனர்.

இதையடுத்து, கோதண்டராமனும் அது எப்படி என வாக்குவாதம் செய்ய, நீங்க இங்க சாப்பிடத்துக்கான ஆதாரம் இருக்கா? பிள்லை தாங்க இல்ல போன் நம்பர் தாங்க என கேட்க தயங்கி நிற்கிறார். மேலும் இவர் தான் பொய்யான கம்பிளைன்ட் கொடுத்தார் அவர் கிட்ட கேள்வி கேளுங்க என சொல்ல, அவர் அங்கிருந்து ஓடிச்செல்கிறார். ஆபிசரும் இனி எந்த பிரச்சனையும் இல்ல. நீங்க கேண்டின் நடத்தலாம் என சொல்லி செல்ல, அனைவரும் சந்தோசப்படுகின்றனர்.


இன்னொரு பக்கம், ஜெனியின் அப்பா வீட்டுக்கு வருகிறார். ஜெனியின் குழந்தையை வாங்கி கொஞ்ச, ஜெனியும் அவரை கட்டிப்பிடித்து அழுகிறார்.

மறுபக்கம், கோபியும் ஈஸ்வரியும் பேசிக் கொண்டிருக்க, ஈஸ்வரி போலீஸ் பிரச்சனை ஆகுமோ என பயப்பட, கோபியும் மேலும் பயம் காட்டுகிறார். 

அந்த இடத்திற்கு கோபியின் அப்பாவும், செழியனும் வர, என்ன நடந்த என்று கேட்க, நடந்தவற்றை சொல்லுகிறார்.

Advertisement

Advertisement