• Mar 02 2025

'பாட்ஷா' பட வெற்றிக்கு காரணமே இதுதான்..? பல வருடம் கழித்து வெளியான உண்மை

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமாவில்  தனக்கென ஒரு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியவர் ரஜினிகாந்த். இவர் ஆரம்பத்தில் பஸ் டிரைவராக இருந்து அதன் பின்பு சினிமாவில் நடிக்க வேண்டும் ஆர்வத்தினால் படிப்படியாக முன்னேறி இன்று ரசிகர்களின் ஆதரவால் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வருகின்றார்.

சினிமாவில் அழகானவர்கள், கலர் ஆனவர்கள் தான் சாதிக்க முடியும், அவர்களைத்தான் மக்களுக்கு கொண்டாடுவார்கள் என்ற மாயையை உடைத்தவர் ரஜினிகாந்த். இவருடைய நடையும் ஸ்டைலும் நடிப்புத் திறமையும் இவரை  புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை, முத்து, பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி, ஜெயிலர் போன்ற பல படங்கள் இன்றளவில் மட்டும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக காணப்படுகிறது. மேலும் 70 வயதை கடந்தும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் காணப்படுகின்றார்.


இந்த நிலையில், பாட்ஷா படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன என்று  பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தனியார்  ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.


அதன்படி அதில் அவர் கூறுகையில், பாட்ஷா படத்தின் வெற்றிக்கு  உண்மையான காரணம் என்னவென்றால் அது அந்த நேரத்தில் அந்தப் படத்தில் வேலை செய்த ஒட்டுமொத்த  பட குழுவினரும் தான்.  டீம் ஒர்க் காரணமாக தான் இந்த படம் வெற்றி பெற்றது.

 அந்த படத்தில் தேவாவுடைய சாங், வைரமுத்து உடைய சாங், எடிட்டிங், கொரியாகிராபி ஆகியவற்றை எடுத்தால் அந்த படம் ஒன்றுமே இல்லை என்று தான் தோணும். ஆனால் ஒவ்வொருவரும் இந்த படத்திற்காக கடினமாக உழைத்தார்கள். அந்த எஃபெக்ட் தான் படத்திற்கு  டீம் ஒர்க்காக வெளியே வந்தது என தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement