கடந்த 2022ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் ஆணாதிக்க வர்க்கத்துக்கு எதிராக எடுக்கப்பட்டது. இது ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி தற்போது இதன் இரண்டாவது பாகமும் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் ஹீரோயின் ஆக நடித்தவர் தான் நடிகை மதுமிதா. இவர் அந்த சீரியலில் ஜனனி என்ற ரோலில் நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. எதிர்நீச்சல் சீரியலில் முதலாவது பாகத்தில் இவருடைய பங்கு அளப்பரியதாக காணப்பட்டது.
d_i_a
இதைத் தொடர்ந்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதில் ஏனைய நடிகைகள் நடித்த போதும் மதுமிதா ஒரு சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார்.
இந்த நிலையில், நடிகை மதுமிதா இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்குச் சென்ற மதுமிதா அங்கு நுவரேலியா சீதா எலிய கோவிலுக்கு சென்றதுடன் தேயிலை தோட்டத்துக்கும் சென்றுள்ளார். தற்போது இவருடைய சுற்றுலா பயண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Listen News!