• Dec 25 2024

மையூவுக்கு பயத்தில் கோபியை கடத்திச் செல்லும் ஈஸ்வரி.. பாக்கியா சொன்ன முடிவு

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், மையூ தனது பிறந்த நாளைக்கு கோபி வருவார் என பர்த்டே உடுப்பையும் மாற்றாமல் அவருக்காக காத்துக் கொண்டு இருக்கின்றார். இதை பார்த்த ராதிகா அவர் வரமாட்டார்.. உனக்கு நான் அம்மா. மாமா எல்லாரும் இருக்கின்றோம்..

புது வீட்டுக்கு போன பிறகு உனக்கு ஒரு பெரிய கிப்ட் இருக்குது என்று மையூவை சமாதானப்படுத்துகின்றார். மேலும் அங்க வச்சு உன்னுடைய பிறந்தநாளை பெருசாக கொண்டாடுவோம் என்று சொல்லுகின்றார். இதனால் மையூ கொஞ்சம் சமாதானம் ஆகின்றார்.

இன்னொரு பக்கம் கோபி மையூவுக்கு நகை வாங்க உள்ளதாக டிசைன் ஒன்றை ஈஸ்வரிக்கு காட்ட, நல்லா இருக்கு என்று சொன்ன ஈஸ்வரி அதற்குப் பிறகு நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போகணும் உனக்காக வேண்டி இருக்கின்றேன் என்று பிளேட்டை மாற்றுகிறார்.


இதைக் கேட்ட கோபி நாளைக்கு மையூவை பார்க்க போவோம் என்று இருந்தேன்.. இன்னொரு நாள் கோயிலுக்கு போவோம் என்று சொல்ல, இல்லை என கோபியை எமோஷனலாக பேசி நாளைக்கு போவதற்கு சம்மதிக்க வைக்கின்றார்.

அதற்கு பிறகு பாக்யாவிடம் விஷயத்தை சொல்ல, அவர் நான் வரவில்லை என்று சொல்லுகின்றார். கோவிலுக்கு வந்தால் இரண்டு, மூன்று நாட்கள் ஆகும் அதுவரைக்கும் ரெஸ்டாரண்டை கவனிக்க முடியாது என்று சொல்லுகின்றார்.

இறுதியில் ஈஸ்வரி யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நான் கோபியுடன் போவேன் என்று கிளம்புகின்றார். மேலும் அவர்களுடன் செழியனும் இனியாவும் செல்லுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement