• Dec 26 2024

உங்க பாட்சா இங்க பலிக்காது ஈஸ்வரி... வீட்டை விட்டு துரத்தியடிக்க பிளான்? கண்டிஷனில் சிக்கிய கோபி?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான எபிசோடு வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ராதிகா வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்கார, கோபி ஈஸ்வரியை கூட்டிக் கொண்டு வந்து  உட்கார வைக்கிறார். அதில் சாப்பிடுவதற்காக அவல் உப்புமாவை கொடுக்க, இது எல்லாம் சாப்பிடுவீங்களா? என்று ஈஸ்வரி முகம் சுழிக்கிறார். அதற்கு கோபி இன்டைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள் அம்மா, நாளைல இருந்து சப்பாத்தி போட சொல்லுகிறேன் என சொல்ல, அதை யார் செய்வா என கமலா கேட்கிறார்.

மேலும் தொட்டுக்க என்ன இருக்கு என்று ஈஸ்வரி கேட்க , அவல் உப்புமாவுக்கு யாரும் தொட்டுக்க செய்வார்களா என்று கமலா சொல்லுகிறார். அதற்கு நாங்க செய்வோம் என்று ஈஸ்வரி பதில் சொல்லுகிறார். மேலும் அவல் வேகவே இல்லை என்று குறையாக சொல்லுகிறார்.

மறுபக்கம் ராமமூர்த்தி கவலைப்படுவார் என்று அமிர்தாவும் எழிலும் பேசிக்கொண்டிருக்க பாக்கியா சுடுதண்ணி கொண்டு வருகிறார். அதன் பின் ராமமூர்த்திக்கு ஆறுதல் சொல்ல, அவர் ஈஸ்வரி புள்ள பாசத்துல இருக்கா, அவன் அந்த பாசத்தை வச்சு ஏமாற்றிக்கொண்டு திரிகிறார்.  அவளுக்கும் பட்டா தான் புத்தி வரும் என்று சொல்லுகிறார்.


இதைத்தொடர்ந்து கோபியும் ஈஸ்வரியும் ஹாலில்  இருக்க, கோபியுடன் பேசுவதற்காக ராதிகா அவரை தனியாக  கூப்பிடுகிறார். என்னை இருந்தாலும் இங்கேயே பேசு என்று ஈஸ்வரி சொல்ல, இங்க இரண்டு ரூம் தான் இருக்கு அதுல நீங்க எங்க தூங்குவீங்க என்று கேட்க, ஒரு ரூம்ல நீங்க தூங்குங்க மத்த ரூம்ல நான் தூங்குறேன். உங்க அம்மாவை ஹால்ல படுக்க வைங்க என்று சூட்கேசுடன் ரூமுக்கு செல்கிறார். 

அது மட்டும் என்று உள்ளே போய் கமலாவின் துணிகளை எல்லாம்  எடுத்துக் கொண்டு ஹாலில் போடுகிறார். இதை பார்த்து கோவம் அடைந்த ராதிகா, இன்னும் இரண்டு நாள் தான் டைம் உங்க அம்மாவ உங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க என்று கண்டிஷன்  போடுகிறார்.

Advertisement

Advertisement