• Dec 26 2024

அமிர்தா விஷயத்தில் ஈஸ்வரி எடுத்த விடாப்பிடி முடிவு! கோபிக்கு அழிவு ஆரம்பம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், அமிர்தாவின் அம்மா ஈஸ்வரிடம் அமிர்தாவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருக்கு, ஆனா மாப்பிள்ளை தான் இப்போதைக்கு வேண்டாம்  என்று இருக்கார் என சொல்ல, அவன் அப்படித்தான் நாங்க ஒன்னு  சொன்னா அவன் ஒன்று செய்வான் என ஈஸ்வரி சொல்ல, நான் மாப்பிள்ளை கிட்ட பேசுறேன் என அமிர்தாவின் அம்மா சொல்லுகிறார்.

மறுபக்கம் பாக்கியாவின் நினைவுகளோடு பழனி வீட்டுக்கு வர, அவரது அம்மாவும் அக்காவும் நீ பாக்யா கிட்ட பேசுறியா இல்ல நாங்க பேசவா என  கேட்க, இப்போ எனக்கு எதுவும் தோணல என்று சொல்லி அன்பு குறித்து பாட்டு பாடிக்கொண்டே செல்கிறார் பழனி.


இதையடுத்து பாக்கியாவின் முகத்தை பார்த்து பார்த்து சிரிக்கிறார் செல்வி. உன்னையும் பழனிச்சாமி சாரையும்  நினைத்து பார்த்தால் சிரிப்பு வருது எனக் சொல்லி சிரிக்கிறார். 

அதன் பிறகு அமிர்தாவின் அம்மாவை பஸ் ஸ்டாண்ட் கூட்டிக் கொண்டு செல்லும் போது அவர் குழந்தையை பற்றி பேசுகிறார். அதற்கு எழில் இப்போதைக்கு குழந்தை வேண்டாம், அது நிலாவிற்கு பிரச்சனையாக  கூட வரலாம். குழந்தை விஷயத்துல நானும் அமிர்தாவும் பேசி முடிவெடுத்து விட்டோம். நீங்க கொடுக்கிற பிரஷர்ல நாங்க குழந்தை பெத்துக்க கூடாது. அமிர்தாவுக்கும் நிலாவுக்கும் எந்த பிரச்சனையும் இந்த வீட்டில் வராது என சொல்லுகிறார்.

இதைத்தொடர்ந்து கோபியின் ரெஸ்ட்ரானுக்கு வந்த ராதிகா ப்ரைட் ரைஸ் ரெடி பண்ண சொல்லி சாப்பிட, அந்த நேரத்தில் செப் வீட்டுக்கு கிளம்புகிறார். அதற்கு நாளைக்கு வந்து விடுவீங்களா? உங்க வீட்டு அட்ரஸ் எனக்கு வாட்ஸ் அப் பண்ணி விடுங்க என கோபி சொல்ல,  இதை பார்த்து ராதிகா டென்ஷன் ஆகிறார்.

அதன் பின்பு வீட்டுக்கு வந்த எழில், அமிர்தா அம்மா கிட்ட குழந்தை விஷயத்தை பத்தி பேசினீங்களா? ஏன் இப்படி பண்றீங்க பாட்டி எனக் கேட்க, நான் பேசறதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்க, இந்த வீட்டில் திரும்பவும் குழந்தையை பத்தி பேசாதீங்க என்று எழில் சொல்லுகிறார். அதற்கு ஈஸ்வரி  நீங்க குழந்தை பெத்துக் வரைக்கும் நான் இப்படி தான் பேசுவேன் என  சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement