• Apr 17 2025

’ஜெயிலர் 2’ படத்தின் டைட்டில் இதுதான்.. அனிருத் கொடுத்த ஐடியாவா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் தெரிந்தது. ரஜினியின் படங்களில் இந்த படம் தான் மிக அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை செய்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்பட்டது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ’ஜெயிலர் 2’ படத்தின் திரைக்கதை எழுதும் பணியை நெல்சன் தொடங்கி விட்டதாகவும் இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ’ஜெயிலர்’ முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் இரண்டாம் பாகத்தில் தொடர்வார்கள் என்றும் கூறப்பட்டது.  

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ’ஹூக்கும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ’ஜெயிலர்’ முதல் பக்கத்தில் ’ஹூக்கும்’ என்ற பாடல் மற்றும் சில இடங்களில் வசனங்கள் வரும் நிலையில் அதையேதான் இரண்டாம் பாகத்துக்கு டைட்டிலாக நெல்சன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இது அனிருத் கொடுத்த ஐடியாவாகத்தான் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் ’ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் முதல் பாகம் போலவே அகில இந்திய அளவில் பிரபல நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார்கள் என்றும் இதில் ஒரு பிரபல நடிகை முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ’ஜெயிலர் 2’ குறித்து வந்து கொண்டிருக்கும் தகவல்களை பார்க்கும்போது அந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஒவ்வொரு ரஜினி ரசிகர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’தலைவர் 171’ படத்திற்கு பிறகு ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement