• Dec 26 2024

‘குணா’ படத்தின்போது ஜனகராஜ்-க்கு விழுந்த அடி உதை.. கமல் படத்தில் இனி நடிக்க மாட்டேன் என சபதம்..

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான ’மஞ்சும்மல் பாஸ்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று நூறு கோடி வசூலை அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 100 கோடி வசூல் செய்திருப்பது என்பது அசாதாரணமானது என்றும் இதுதான் உண்மையான வெற்றி என்றும் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்த படத்தில் ரெஃபரென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ள கமல்ஹாசனின் ’குணா’ படமும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. ’குணா’ திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான போது பெரிய வெற்றியை பெறாத நிலையில் 33 ஆண்டுகளுக்கு அளித்து தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் குடைத்துள்ளது.

இந்நிலையில் ’குணா’ படத்தின் போது நடந்த சில சம்பவங்கள் ’குணா’ குகையை தேடி கண்டுபிடிக்க படக்குழுவினர் சந்தித்த கஷ்டங்கள், இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பின் போது நடந்த சில சம்பவங்கள் ஆகியவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணியின்போது ஜனகராஜ் மற்றும் இயக்குனருக்கு இடையே நடந்த ஒரு சண்டை குறித்தும் பிரபல பத்திரிகையாளர் தனது யூடியூபில் கூறியுள்ளார். ’குணா’ படத்திற்காக டப்பிங் பணியின்போது ஜனகராஜ் வந்தபோது இயக்குனர் சந்தானபாரதி டேக் சரியில்லை இன்னொருமுறை எடுக்கலாம் என்று கூறியதாகவும் ஆனால் சரியாகத்தான் இருக்கிறது என்று ஜனகராஜ் வாதிட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென கலகலப்பு ஏற்பட்டதாகவும் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

அதன் பிறகு இது குறித்த தகவல் அறிந்து உடனே கமல்ஹாசன் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்ததாகவும் அப்படியும் ஜனகராஜ் சமாதானம் ஆகவில்லை என்பதை அடுத்து இனிமேல் கமல்ஹாசன் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியதாகவும் தெரிகிறது.

அந்த பத்திரிகையாளர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் இந்த படத்தின் டப்பிங் போது சில பிரச்சனைகள் வந்தது உண்மைதான் என்று இந்த படத்தின் பணி புரிந்த சிலரும் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றன.  

Advertisement

Advertisement