• Jun 06 2025

இறுதி கட்டத்தை நிறைவு செய்த ஜனநாயகன்...! பொங்கலுக்கு வெளியாகும் என எதிர் பார்ப்பு...!

Roshika / 2 days ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தவிர்க முடியாத நடிகராக வலம் வந்தவர். இவர் தற்போது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். தனது கடைசி படமான "ஜனநாயகன்" படத்தினை நடித்து முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


நடிகர் விஜய் "நாளைய தீர்ப்பு" படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல  தடைகளை கடந்து முன்னேறி சென்றவர். இவர் தற்போது "தமிழர் வெற்றி கழகம்" என்ற அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்து அதன் தலைவராக செயற்பட்டு வருகின்றார். தனது திரைத்துறையின் இறுதி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த படம் இவரது அரசியல் பயணத்திற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன்,  பிரியாமணி, சுருதி ஹாசன் எனப் பலர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான சென்ட் ஆப் பார்ட்டி நடை பெற்றுள்ளது. 


மேலும் விஜய் முழு நேரமாக அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அதற்கான ஆயத்தங்களை  TVK கட்சி செய்து வருதாகவும் , அடுத்த வருட பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மாவட்ட ரீதியில் மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை தெரிந்து கொள்வதகாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன . இந்த நிலையில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.







Advertisement

Advertisement