• Dec 26 2024

மனைவியை இரண்டாவது முறையாக பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவி பட நடிகர்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர்  ரோனித் ராய். ஹிந்தி இயக்குநராக அறிமுகமாகிய இவர்  ஜான் தெரே நாம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். இதன் பின்னர் சில படங்களில் ஹீரோவாக நடித்த இவர் தற்பொழுது வில்லனாகவும் நடித்து வருகின்றார்.

மேலும் தமிழில் ஜெயம் ரவி மற்றும்  நிதி அகர்வால் நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.இந்நிலையில், 58 வயதாகும் ரோனித் ராய் தனது மனைவி ஜோன்னா நீலம் என்பவரை திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு திருமண நாளில் மீண்டும் திருமணம் செய்து கோலாகலமாக விழா நடத்தி பாலிவுட் பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் விருந்து போட்டுள்ளார்.


கடந்த 2003ம் ஆண்டு இவர்கள் முதல் திருமணம் செய்து கொண்டதோடு இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில், மறுபடியும் கோவாவில் உள்ள கோயிலில் அக்னி சாட்சியாக ஐயரை எல்லாம் வைத்து முதல் திருமணத்தை எப்படி செய்து கொண்டனரோ அதே போல 20 ஆண்டுகள் கழித்தும் திருமணம் செய்துள்ளனர்.

 திருமணம் முடிந்த கையோடு மனைவிக்கு அன்பு முத்தங்களை உதட்டிலேயே பரிசாக அளித்தார் ரோனித் ராய்.இது குறித்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement