• Dec 27 2024

ஜெயம் ரவியின் டைவர்ஸ் விஷயம் உண்மை.. இதில் தனுஷையும் கோர்த்து விட்டார்கள்! பிரபலம் பகிர்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகில் தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜெயம் ரவி ஆர்த்தியின் விவகாரத்து விஷயம் தான். பல்வேறு கருத்துக்கள் வெளியான போதும் ஜெயம் ரவி ஆர்த்தி தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

கடந்த சில நாட்களவே ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் வாக்குவாதம் ஆரம்பித்து மனஸ்தாபம் ஏற்பட்டு இப்போது பெரும் சண்டையில் வந்து நிற்கின்றது என்றும், அவர்கள் கூடிய சீக்கிரமே விவாகரத்து முடிவை அறிவிக்க உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தது.

எனினும் இவர்களுடைய சண்டைக்கு காரணம் ஜெயம் ரவியின் மாமியார் தான் என கூறப்பட்டது. அதாவது அடுத்த படத்திற்கு தனக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என ஜெயம் ரவி கேட்டதாகவும், அதற்கு ஜெயம் ரவியின் மாமியார் மறுப்பு தெரிவித்ததாகவும் இதனாலையே சண்டை முற்றியதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி இவர்களுக்கு இடையிலான சண்டைக்கு முக்கிய காரணமே தனுஷ் தான் என்று இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவரே தனது மனைவிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். அவர் ஏன் இன்னொரு ஜோடியின் விவாகரத்துக்கு காரணமாக இருக்கப் போகின்றார் என்று அவருக்கு ஆதரவாக குரல்களும் எழுந்து வருகின்றன.


இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி - ஆர்த்தி விஷயம் தொடர்பில் சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் பேட்டி அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், நாங்கள் விசாரித்த வரை ஜெயம் ரவிக்கும் ஆரத்திக்கும் இடையே சண்டை இருப்பது உண்மைதான். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதேபோல அவர்களை சமாதானப்படுத்துவதற்காக இரண்டு பக்கமும் பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டு தான் உள்ளன. இரண்டு பேருக்கும் பிரச்சனை இருப்பதும் அது விவாகரத்து முடிவுக்கு வந்தது எல்லாம் உண்மைதான். ஆனாலும் இருவரும் சேர்ந்து விட்டால் நல்லது.

அதேபோல இந்த விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்று சிலர் வதந்தியை கிளப்பி விடுகின்றார்கள். அது எல்லாம் உண்மை இல்லை. கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வருவது சாதாரணம். அதற்கு தனுஷ் தான் காரணம் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. எதையும் யோசிக்காமல் இதில் தனுஷை இழுத்து விடுவது சரியில்லை. அவரின் இமேஜை தவறாக குத்துவதற்கு இவ்வாறு செய்கின்றார்கள் என அந்தணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement