• Dec 26 2024

இன்று மாலை வெளியாகிறது பா.ரஞ்சித்தின் "பாட்டல் ராதா" டீசர் !!

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

நீலம் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் மூலம் பா.ரஞ்சித் தயாரித்து பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தினகரன் சிவலிங்கம் இயக்கும் முதல் திரைப்படமான "பாட்டல் ராதா" படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை உண்டாக்கி வருகிறது.

Image

இத் திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் குட் நைட் படத்திற்கு இசையமைத்தவரான ஷான் ரோல்டன் இப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். 

Image

ஒரு பெரும் சமூக கருத்துடன் வெளிவர இருப்பதாக எதிர்பார்க்கப்படும் இத் திரைப்படத்திற்கான இறுதிகட்ட வேலைகள் நடந்துவரும் நிலையில் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதாவது "பாட்டல் ராதா" படத்தின் டீசரானது இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.




Advertisement

Advertisement