• Dec 26 2024

செழியனுக்கு பளார் பளாரென அறைந்த ஜெனியின் அப்பா! பாக்கியாவுக்கு ஷாக் கொடுத்த கணேஷ்! அதிரடி திருப்பம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான எபிசோட் வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்

இறுதியாக, பாக்கியா கேண்டின் நடாத்த இனி எந்த பிரச்சனையும் இல்ல. நீங்க கேண்டின் நடத்தலாம் என ஆபிசர் சொல்ல, அனைவரும் சந்தோசப்படுகின்றனர்.

இதை தொடர்ந்து, வீட்டிற்கு வரும் பாக்கியாவுக்கு ஈஸ்வரி மீண்டும் அதனை யாருக்காவது கொடுக்குமாறு சொல்கிறார்.ஆனாலும், நான் கொடுக்கிறதா இல்ல அத்த. எது வந்தாலும் நான் சமாளிப்பன் என சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து,பாக்கியா நான் ஒரு புது ஸ்வீட் செய்ய போறன். அதுக்கு பெயர் மட்டும் செட் ஆகுது இல்ல என சொல்லி, இறுதியாக அவரது மாமா , அத்தை பெயரை இணைத்து ராமேஸ்வரி என வைக்கிறார். எல்லாரும் பெயர் நல்லா இருக்கு என சொல்ல, ஈஸ்வரி மட்டும் பெயர் நல்லா தான் இருக்கு, ஆனா நீ தான் என் பேச்ச கேக்கிற இல்லையே என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.


மறுபக்கம், ஜெனியின் அப்பா, அம்மா செழியனை பற்றி பேசிக் கொண்டிருக்க, அந்த இடத்திற்கு செழியனும் வர, ஜெனியின் அப்பா கோவத்தில் அவரை அறைகின்றார். மேலும், எங்க பொண்ண எப்படி வளத்தோம், உங்க வீட்டுல வேலைக்காரி போல வச்சி இருக்கீங்களா? என திட்ட, இன்னைக்கு பாப்பாவுக்கு ஊசி, அதுக்கு தான் இந்த பைல்ல கொடுத்துட்டு போக வந்தன் என செழியன் சொல்லுகிறார். மேலும், நீ பொருட்காட்சிக்கு வந்தது அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு, ஆனா எனக்காக வரல என தெரியும் என சொல்லி கிளம்புகிறார்.


இதையடுத்து, ஜெனியின் அப்பா ஜெனிக்கு டிவோஸ் பண்ணி வச்சிட்டு, இன்னொரு கல்யாணம் செய்வோம் என அவரது அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்க, ஜெனியின் அம்மா அதுக்கு ஜெனி சம்மதிக்க மாட்டா, செழியன் மேல அவளுக்கு கோவம் மட்டும் தான் இருக்கு, ஒருக்கா பேசி பார்ப்போம் என சொல்லுகிறார். அதன்படி, செழியனை நாளை காலை நேரில் வருமாறு ஜெனியின் அப்பா சொல்லுகிறார்.

இன்னொரு பக்கம் பாக்கியாவின் பொருட்காட்சிக்கு கணேஷ் வருகிறார். அவர் வாசலில் வந்து நிற்க, பாக்கியாவும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.. 

Advertisement

Advertisement