• Dec 26 2024

இனி விஜய், அஜித்துக்கு போட்டியில்லை.. டார்கெட் ரஜினிதான்.. சூர்யாவுக்கு ஜோதிகா சொன்ன பிளான்?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்த ’கங்குவா’ படத்தின் அப்டேட் சில மாதங்களாக வரவில்லை என்றும் அதற்கு பின் ஆரம்பித்த ’சூர்யா 44’ படத்தின் அப்டேட் கூட அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் ’கங்குவா’ படத்தின் அப்டேட் வராமல் இருந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று திடீரென ’கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வந்ததற்கு ஜோதிகா தான் காரணம் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘அப்டேட் கொடுக்க முடியாவிட்டால், சொன்ன தேதியில் படத்தை வெளியிட முடியாவிட்டால் எதற்காக படம் எடுக்கிறீர்கள்? எங்கள் சூர்யா அண்ணனை விட்டு விடுங்கள்’ என்று சூர்யா ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர் தான் சூர்யாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளதாக தெரிகிறது.

எதிர்காலத்தில் ரசிகர்களை வைத்து பல்வேறு திட்டங்கள் வைத்துள்ள சூர்யா, ரசிகர்களை பகைத்து கொள்ள கூடாது என்று முடிவு செய்து ஒரு தரமான அப்டேட்டை வெளியிடலாம் என்று திட்டமிட்ட போது தான் ஜோதிகா ’சின்ன சின்ன அப்டேட் எல்லாம் வேண்டாம், ஒரேயடியாக ரிலீஸ் தேதியை  அறிவித்து விடுங்கள்’ என்று கூறியதாக தெரிகிறது.

அதன்பின்னர் ரிலீஸ் தேதி அக்டோபர் 10 என முடிவு செய்தபோது ரஜினியின் ‘வேட்டையன்’ படமும் அதே தேதியில் வருகிறது என்று சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆலோசனை செய்ததாகவும் அப்போது நீண்ட விடுமுறை நாள் என்பதால் அதை மிஸ் செய்ய வேண்டாம், நமது படமும் மாஸ் படம் தான், எனவே தைரியமாக ரஜினியுடன் மோதலாம்’ என்று ஜோதிகா ஆலோசனை கூறியதாகவும் அதன் பின்னர் நேற்று அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இனிமேல் விஜய்க்கு போட்டி, அஜித்துக்கு போட்டி என்பதெல்லாம் வேண்டாம், நேரடியாக நாம் ரஜினிக்கு போட்டியாளர் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்துவோம் என்று ஜோதிகா சொன்ன பிளானை சூர்யாவும் ஏற்றுக் கொண்டதால்தான் நேற்று அதிரடியாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement