• Dec 26 2024

நிக்சனின் மோசமான கமெண்டுக்கு என்ட்டு காட் போட மறுத்த கமல்ஹாசன்- வினுஷா போட்ட பதிலடி பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


 கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிரடியாக பிரதீப் கடந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது, பிரதீப் ரசிகர்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் அமைந்தது. 

பிரதீப் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் "பிரதீப் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த போட்டியாளர்களை தகாத வார்த்தைகளால் கூட திட்டி இருக்கிறாரே தவிர, மற்ற எந்த ஒரு பெண் போட்டியாளர்களிடமும் தவறாக நடந்து கொண்டது இல்லை என்றும், மாயா - பூர்ணிமா, இருவரும் வேண்டும் என்றே அவரை டார்கெட் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விரட்டிவிட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.


 பிக்பாஸ் வீட்டின் உள்ளேயும், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா ஆகியோர் பிரதீப் மீது வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு மிகவும் தவறானது என்று ஆணித்தனமாக கூறி வந்தனர் மேலும் நேற்றைய தினம் நடந்த எப்பிஷோட்டில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததில் எனக்கு எந்த பங்கும் இல்லை, அது போட்டியாளர்கள் எடுத்த முடிவு தான் என கமல் தன் மீது வந்த விமர்சனங்களை சரி செய்ய மழுப்பலாக எபிசோடு முழுவதும் பேசினார்.

நிக்சன் பிக் பாஸ் வீட்டில் நடிகை வினுஷா பற்றி மிகவும் மோசமாக பேசி இருந்தது சர்ச்சை ஆகி இருந்தது. அதற்கு நடிகை வினுஷாவும் கடும் கோபமாக பதிவு ஒன்றை போட்டிருந்தார்.


கமல் இந்த வாரம் இது பற்றி கேள்வி எழுப்பி நிக்சனை எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதனால் "Ended with Disappointment" என வினுஷா தேவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement